இலங்கையில் அவசரகால நிலை நீடிப்பு: அதிவிசேட வர்த்தமானி மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!!
இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடிக்கும் வகையில், ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த அவசரகால நிலை பெப்ரவரி 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அவசரகால நிலையை மேலும் நீடிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு தொடர்பான மேலதிக விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் மூலம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.