உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மட்டக்களப்பில் போலி சட்டத்தரணி கைது – 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்ற உத்தரவு.!!!

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (11) நடந்த அடையாள அணிவகுப்பு சுட்டில், கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணி அடையாளம் கண்டதையடுத்து, அவரை எதிர்வரும் நவம்பர் 24 வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த 42 வயதுடைய போலி சட்டத்தரணி, கடந்த சனிக்கிழமை (08) ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டில் வைத்து பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அடையாள அணிவகுப்புக்காக இன்று (11) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார். இன்று நீதிமன்றில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில், அவருக்கு எதிராக முறைப்பாடு செய்த மூன்று பேரும் அவரை அடையாளம் காட்டினர்.

போலி சட்டத்தரணி கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக சட்டத்தரணி போல நடித்து வந்துள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், போலி சட்டத்தரணியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போலி வருகை அட்டை, ரப்பர் முத்திரை, மற்றும் வாகனங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள் தயாரித்த கல்முனைப் பிரதேச அச்சுக்கூட உரிமையாளர் ஒருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700124

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time