சாய்ந்தமருதில் கடலில் மூழ்கும் மீன்பிடி படகு: மீனவர்கள் அவசர தீர்வு கோரிக்கை.!!!
சாய்ந்தமருது நடுத்துறை கடற்பகுதியில் நங்கூரமிட்டிருந்த ஒரு மீன்பிடி படகு கடலில் மூழ்கியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படகிற்காக ஒரு கோடிக்கும் மேற்பட்ட ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் உரிமையாளரும் மீனவர்களும் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இப்பகுதியில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, சாய்ந்தமருதில் படகு தரிப்புத்துறை அமைக்கப்படும் என கடந்த காலங்களில் பல அரசியல்வாதிகள் வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும், அவை நடைமுறைக்கு வரவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலாவது இப்பிரதேச மீனவர்களின் நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
அதேவேளை, இப்பகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.











