உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

49வது தேசிய விளையாட்டுப் போட்டியில் மகுடம் சூடியது; புத்தளம் பிரதேச செயலக அணி.!!!

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

49வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு நடைபெற்ற பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான காற்பந்தாட்ட சுற்றுப்போட்டி தொடரில் புத்தளம் பிரதேச செயலக அணி சம்பியனாக மகுடம் சூடியுள்ளது.

இந்த போட்டி தொடர் அண்மையில் புத்தளம் மாவட்டம் மாராவில சென் செபஸ்தியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டி தொடரில் புத்தளம், சிலாபம், வென்னப்புவ, நாத்நாண்டிய, தங்கொட்டுவ, கல்பிட்டி ஆகிய 06 பிரதேச செயலக அணிகள் பங்கேற்றன.

இறுதிப்போட்டியில் புத்தளம் பிரதேச செயலக அணியும், வென்னப்புவ பிரதேச செயலக அணியும் எதிர்கொண்டதில் 03 கோல்களினால் புத்தளம் பிரதேச செயலக அணி வெற்றி பெற்று புத்தளம் மாவட்ட சம்பியனாக தகுதி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் புத்தளம் பிரதேச செயலக அணியானது அடுத்து வரும் அகில இலங்கை ரீதியிலான மாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றுள்ளது.

புத்தளம் பிரதேச செயலக அணியினை புத்தளம் விளையாட்டு அதிகாரி சுமித் வழி நடாத்தி இருந்தார்.

புத்தளம் நகர சிரேஷ்ட காற்பந்தாட்ட வீரர்களும் இதற்கு உதவியாக செயற்பட்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700460

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time