உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மாகாணப் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட நிதியை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய.!!!

வெல்லவாயப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் குழுவொன்றுடன் நேற்று (01) நடைபெற்ற சுமுகமான சந்திப்பில், ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டு பல முக்கிய கருத்துகளை வெளியிட்டார்.

அப்போது கருத்து தெரிவித்த பிரதமர், மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாகாணங்களுக்கும் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிதி ஒதுக்கீடுகள் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளுக்காக உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

பாடசாலைகளில் காணப்படும் கட்டிட சேதங்கள், கழிப்பறை வசதிகள் பற்றாக்குறை, குடிநீர் மற்றும் மின்சார வசதிகளின் குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக உரிய கோரிக்கைகளை சமர்ப்பிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் கல்வி முன்னேற்றம், பெண்களின் சமூக பங்குபற்றல், குழந்தைகளின் எதிர்கால நலன் ஆகியவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. பெண்கள் முன்வைத்த கருத்துகள் மற்றும் பிரதேசத்தின் தேவைகள் குறித்து அரசு கவனம் செலுத்தும் என பிரதமர் தெரிவித்தார்.

சந்திப்பு நட்புறவான மற்றும் பயனுள்ள சூழலில் நிறைவடைந்தது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700957

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time