காலி துறைமுகம் அருகே ஈரான் கப்பல் விபத்து: 35 பேர் மீட்பு – இலங்கை கடற்படை அவசர நடவடிக்கை.!!!
காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 மைல் தொலைவில் பயணம் செய்த ஈரானிய கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதில் இருந்தவர்களை மீட்கும் பணிக்காக இலங்கை கடற்படையின் படகுகள் உடனடியாக சம்பவ இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடற்படையினரின் விரைவான மீட்பு நடவடிக்கையினால், கப்பலில் இருந்த சுமார் 35 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கப்பல் விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகாத நிலையில், கடற்படை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.