தங்கப் பதக்கம் வென்ற பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு – ஞானசார தேரர் வாழ்த்து.!!!
தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த வீராங்கனை பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு, மாநாயக்க தேரர்கள் சார்பிலும், இலங்கை மக்களின் சார்பிலும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
“இவர் இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார். சர்வதேச மட்டத்தில் மேலும் வெற்றி பெற அவரை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்விடயத்தில் இனத்தையும் மதத்தையும் முன்னிலைப்படுத்தி செயற்படக் கூடாது,” என அவர் கூறினார்.
அத்துடன், “பாத்திமா ஷபியா யாமிக் குறித்து சமூக ஊடகங்களில் சிலர் மாறுபட்ட கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இது முற்றிலும் தவறானது. அனைத்து விஷயங்களிலும் மதத்தை முன்னிலைப்படுத்த முடியாது,” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான கருத்துகளை அவர் கொழும்பிலுள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.