ஏறாவூரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது; கைக்குண்டுகள் மீட்பு.!!!
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏறாவூர் 5ஆம் பிரிவு பழைய பாடசாலை வீதியில் அமைந்திருந்த வளாகமொன்றில், ஏறாவூர் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்நடவடிக்கையின் போது, ஏறாவூர் நகரசபை மற்றும் அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் கைக்குண்டுகள் சில மீட்கப்பட்டன.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் பேரிலேயே குறித்த மீட்பு சாத்தியமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




