உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் எரிந்த நிலையில் பணம் மீட்பு.!!!
டில்லியில் உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் பாதி எரிந்த நிலையில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் நீதிபதியின் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அரசு இல்லம், துக்ளக் சாலையில் உள்ளது. இங்கு கடந்த 14 ஆம் திகதி இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், விரைந்து சென்ற பொலிஸாரும், தீயணைப்பு வீரர்களும் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதற்கிடையே, அங்கு உள்ள அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது குறித்து அரசுக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் விளக்கத்துடன் அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டுள்ளார்.