காத்தான்குடி பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில்; ஐஸ், கஞ்சா மற்றும் கசிப்பு போதைப்பொருட்களுடன் 15 பேர் கைது.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் 7800 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது காத்தான்குடி மற்றும் புதிய காத்தான்குடி பிரதேசங்களில் வைத்து மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 7800 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 33,35,29 வயதுடைய நபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இதே வேளை 250 மீற்றர் கசிப்பு போதைப் பொருட்களுடன் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் வைத்து 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கஞ்சாவுடன் இருவருமாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


