உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய – இந்திய மீன்பிடி படகுடன்; 12 மீனவர்கள் கைது.!!!

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை தலைமன்னார் வடக்கு கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒரு (01) இந்திய மீன்பிடி படகையும், அதில் பயணித்த பன்னிரண்டு (12) இந்திய மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

நாட்டின் கடல் எல்லைக்குள் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் அத்துமீறி மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக கடல் சூழல் பாதிக்கப்படுவதுடன், உள்ளூர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்கும் நோக்கில் இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி, தலைமன்னாருக்கு வடக்கே உள்ள உள்ளூர் கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பல இந்திய மீன்பிடி படகுகளை வட மத்திய கடற்படை கட்டளை அதிகாரிகள் கண்காணித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த கட்டளைக்கு உட்பட்ட கடற்படை கப்பல்களை பயன்படுத்தி, நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்திருந்த மீன்பிடி படகுகளை அகற்றுவதற்கான விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது, இலங்கை கடற்படையினர் உள்ளூர் கடல் பகுதியில் தொடர்ந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய மீன்பிடி படகில் சட்டப்பூர்வமாக ஏறி ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் பின்னர், எல்லைச் சட்டங்களை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குறித்த இந்திய மீன்பிடி படகும், அதில் இருந்த பன்னிரண்டு இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகும், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700033

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time