உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

18 வருட கனவு நனவானது; முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.!!!

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இறுப்போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி 06 ஓட்டங்களால் வெற்றிப்பெற்று இவ்வாறு கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

அகமதாபாத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் விராட் கோலி அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் ஆர்சீப் சிங்க மற்றும் கேல் ஜெமீசன் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதன்படி 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

அந்த அணி சார்பில் சாசாங்சிங் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் புவ்னேஸ்வர் குமார் மற்றும் குருனால் பன்டியா தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதற்கமைய 18 வருட காத்திருப்புக்கு பின்னர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700458

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time