உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 19, 2025

Hot News

இனிய பாரதியின் சாரதி கைது.!!!

(பாறுக் ஷிஹான்)

கருணா- பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதி என்றழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியாக செயற்பட்ட ஒருவரை இன்று (07) குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இன்று அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான பஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து 34 வயதுடைய கணகர் வீதி தம்பிலுவில் பகுதியை சேர்ந்த செழியன் என அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜே இவ்வாறு கைதானார்.

கைதானவர் கடந்த 2007 2008- 2009 காலப் பகுதியில் இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் தற்போது அவர் பொத்துவில்-மட்டக்களப்பு வழித்தட பஸ் சாரதியாக கடமை புரிகிறார்.

இந்நிலையில் இன்று பொத்துவில் பகுதியில் இருந்து வழமை போன்று கல்முனை ஊடாக மட்டக்களப்புக்குச் செல்லும் போது கல்முனை பிரதான பஸ் நிலையத்துக்கு அருகில் காத்திருந்த குற்றப்பலனாய்வு பிரிவின் அதிகாரிகள் அவரைக கைது செய்ததுடன் அம்பாறைக்கு மேலதிக விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

இதே வேளை கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே. புஷ்பகுமார் எனும் இனியபாரதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணை வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள முனியக்காடு பகுதியில் அவரது வீட்டில் வைத்து இனிய பாரதி புலனாய் பிரிவினால் கைது செய்யப்பட்டார்.

அத்தடன் அவரது சகாவான சிவலிங்கம் தவசீலன் என்பவர் மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் வைத்து கைதானார். இவர்கள் இருவரும் 1979 ஆம் ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related News

Total Websites Views

Total Views: 322997

Search

விளம்பரங்கள்