உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

காத்தான்குடியில் பாரிய சுற்றி வளைப்பு; விசேட அதிரடிப் படையினர் பொலிசார் இணைந்து 5 மணி நேர தேடுதல் –  9 மோட்டார் சைக்கிள்கள் பொலிசாரினால் கைப்பற்றல்.!!! 

(ஜே.கே)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி மற்றும் மண்முனை பிரதேசங்களில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் இணைந்து நேற்று (26) இரவு பாரிய சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எம் ஐ ரத்நாயக தெரிவித்தார்

இச்சுற்றி வளைப்பில் 50 பொலிசார் 6 விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முக்கிய கேந்திர நிலையங்களில் இச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எம் ஐ ரத்நாயக்க தலைமையில் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதன் இப்போது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடியவாரு இலக்கத் தகடுகளை பொருத்தி இருந்த ஹெல்மெட் அணியாத கண்ணாடிகள் பொருத்தப்படாத 9 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின் போது போதையில் வாகனம் செலுத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இருவரும் கஞ்சாவை வைத்திருந்த மூவருமாக ஏழு பேர் போதைப் பொருட்களுடனும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700409

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time