உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

காத்தான்குடி பொலிஸாரினால் 4000 போதை மாத்திரைகளுடன்; போதை மாத்திரை வர்த்தகர் ஒருவர் கைது.!!!

(ஜே.கே)

சுமார் நான்காயிரம் போதை மாத்திரைகளுடன் போதை மாத்திரை வர்த்தகர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ. ரத்னாயக்கா தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை பத்ர் பள்ளி வீதியில் உள்ள வீட்டில் வைத்தே குறித்த போதை மாத்திரைகளை சந்தேக நபர் விற்பனை செய்து வந்துள்ளார் .

35 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான ஒருவரையே இவ்வாறு நேற்றிரவு (16) பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான நான்காயிரம் போதை பொருள் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன .

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலிரத்னவின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி ரத்னாயக்கவின் தலைமையில் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் தேடுதலின் போது இப்போதை 4000 மாத்திரைகளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு நீதிமான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட உள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700370

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time