உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

காத்தான்குடி பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில்; போதைப்பொருளுடன் ஏழு பேர் கைது.!!!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை, காங்கேயனோடை, பூனொச்சிமுனை, காத்தான்குடி என பகுதிகளில், நேற்று (08) காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் வைத்திருந்த ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நடவடிக்கை, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.டி. ரத்ணாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ், குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி நந்தண புஸ்பகுமார தலைமையில், புலனாய்வு உத்தியோகத்தர் எம்.பீ.எம். தாஹாவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது.

சுற்றிவளைப்பின்போது, சந்தேகநபர்கள் கஞ்சா, ஐஸ் மற்றும் ஹெராயின் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் விவரம் பின்வருமாறு:

3420 மில்லிகிராம் ஐஸ், 50 மில்லிகிராம் ஹெராயின், 2140 மில்லிகிராம் ஐஸ், 800 மில்லிகிராம் கஞ்சா, 800 மில்லிகிராம் கஞ்சா, 2710 மில்லிகிராம் ஐஸ், 2910 மில்லிகிராம் ஐஸ் என்பனவாகும்.

இந்த சந்தேகநபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்கள், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700444

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time