உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

லிட்ரோ எரிவாயு தொடர்பில் முக்கிய தீர்மானம்.!!!

● வெற்று எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி.

லிட்ரோ எரிவாயு கம்பனியினால் 2025 – 2027 காலப்பகுதிக்காக, வால்வு இல்லாத வெறுமை LPG எரிவாயு சிலிண்டர்களின் நான்கு (04) வகைகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை தரநிர்ணயக் கட்டளைகள் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடமிருந்து சர்வதேச போட்டி விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தன.

இதற்கமைவாக நான்கு (04) விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விரிவாக மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட நிலையியற் பெறுகைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த பெறுகை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறைந்தபட்ச விலையையும் கணிசமான பதிலளிப்புக்களையும் முன்வைத்த M/s Sahamitr Metal Pressure Containers Public Co. Ltd நிறுவனத்திற்கு

2.3 கிலோகிராம் சிலிண்டர் – 120,000

5.0 கிலோகிராம் சிலிண்டர் – 185,000

12.5 கிலோகிராம் சிலிண்டர் – 450,000

37.5 கிலோகிராம் சிலிண்டர் – 7,000

என மொத்தமாக வெறுமை LPG எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான பெறுகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700034

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time