கிழக்கில் கைப்பற்றப்பட்ட அதிக கூடிய ஐஸ் போதைப்பொருள்; பிரபல வர்த்தகர் கைது.!!!
(ஜே.கே)
கிழக்கு மாகாண வரலாற்றில் அதி கூடிய ஐஸ் போதைப்பொருள் காத்தான்குடி பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார்.
பொலநறுவை முஸ்லிம் கொலணியைச் சேர்ந்த 29 வயதுடைய பிரபல ஐஸ் வியாபாரி ஒருவரிடமிருந்து 51 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதுவே கிழக்கு மாகாணத்தில் மீட்கப்பட்ட அதி கூடிய ஐஸ் போதைப் பொருளாகும்.
முஸ்லிம் கொலணி பிரதேசத்திலிருந்து காத்தான்குடிக்கு விற்பனைக்காக குறித்த ஐஸ் போதைப்பொருளை கடத்திவந்த போதே பொலிசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
கடத்தலுக்கு பயன் படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 17 இலட்சம் பெறுமதியானது.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






