உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

மகப்பேறு சிகிச்சை மையம் ஆரம்பம்; நீண்ட நாள் தேவையை தீர்த்து வைத்தார் – முஸம்மில்.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி முகத்துவார கிராம மக்களின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்ட மகப்பேறு சிகிச்சை சேவையை கற்பிட்டி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மிலின் முயற்சியின் ஊடாக கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி தம்சிறியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 2025/06/17 ம் திகதி முதல் மாதாந்தம் மகப்பேறு சிகிச்சை சேவையை நடாத்துவதற்கான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேற்பார்வை மற்றும் விசேட கலந்துரையாடல் நேற்று (29) முகத்துவாரம் பாலர் பாடசாலையில் இடம்பெற்றது இதில் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.ஏம் முஸம்மில். கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி எம்..முர்ஷிதா, பொது சுகாதார பரிசோதகர் எம்.சப்ரீன், கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் அதிகாரிகள் உட்பட ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related News

Total Websites Views

Total Views: 259834

Search

விளம்பரங்கள்