உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

இலங்கையில் நீரிழிவு நோய் அபாயம் உயர்வு – ஐவரில் ஒருவருக்கு கண் பார்வை பாதிப்பு.!!! 

இலங்கை – நாட்டில் பெரியவர்களில் ஐந்தில் ஒருவருக்கு (சுமார் 23% முதல் 30% வரை) நீரிழிவு நோய் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உலகளாவிய சராசரியை (ஒன்பதில் ஒருவர்) மிஞ்சும் அளவாக அதிகம். பொதுவான நீரிழிவு வழக்குகளில் அண்மையில் 73% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

கண் சிக்கல்களின் அபாயம்:
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவருக்கு கண் தொடர்பான சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. சிகிச்சை இல்லாவிடில், கண் நோய் உள்ளவர்களில் 11% பேர் பார்வையை இழக்க வாய்ப்பு உள்ளது.

பெரும்பாலான நோயாளிகள் வயதானவர்கள் அல்ல:
நீரிழிவு கண் கிளினிக்குகளில் வரும் நோயாளிகளின் பெரும்பாலானோர் 40–50 வயதுக்குட்பட்ட உழைக்கும் வயதினர். இந்த கண் பாதிப்பு, இலங்கைக்கு ஆண்டுதோறும் சுமார் 923 மில்லியன் ரூபாய் வருமான இழப்பை ஏற்படுத்துகிறது.

முறையான கட்டுப்பாடுகள்:
தேசிய கண் மருத்துவமனையின் ஆலோசகர், கண் மருத்துவ நிபுணர் டாக்டர் கபில பந்துதிலக கூறியதாவது, நீரிழிவு காரணமாக ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க முடியும் என அவர் வலியுறுத்தினார்.

அவரின் பரிந்துரைத்த நடவடிக்கைகளாக ஆரம்ப கட்டத்தில் கண்டறிதல்., வாழ்க்கை முறை மாற்றங்கள் செய்தல், முறையான சிகிச்சை அளித்தல்.

இத்தகுந்த நடவடிக்கைகள் மூலம், நீரிழிவினால் ஏற்படும் பார்வை இழப்பை கட்டுப்படுத்தவோ தடுப்பவோ முடியும் என்றும், ஆரம்ப கட்ட சிகிச்சை விருப்பங்கள் எப்போதும் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810035

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time