மனிதாபிமான பணியாளர்களை தூக்கிலிட்ட இஸ்ரேல் இராணுவம்.!!!
நவீன உலகின் மிக மோசமான குற்றங்களில் ஒன்றாக கருதப்படும் பலஸ்தீன செம்பிறைச்சங்கம் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களின் படுகொலை குறித்த தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத்துவங்கியுள்ளன.
மேற்கு றபாஃ பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தொடர்புகள் இல்லாமல் போய் 8 நாட்களுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கைகளை கட்டி வைத்து விட்டு அவர்களை படுகொலை செய்த சினோனிஸ இஸ்ரேலிய இராணுவத்தினர் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக தெற்கு காஸாபகுதியில் இரண்ட மீட்டர் ஆளத்தில் ஒரே குழியில் அவர்களை புதைத்திருந்த நிலையில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் ஐ.நாவின் துணை நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் உள்ளடங்குவர்.
உலகத்திற்கு இராணுவ ஒழுங்கங்களை போதிப்பவர்கள் என்று பீத்திக் கொள்ளும் இஸ்ரேலிய இராணுவத்தினர் மிக மோசமான படுகொலைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.