உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

அப்துல் அஸீஸ் சன்ஸ் வெற்றிக் கிண்ணம் 2025 சுற்றுத்தொடரில்; மூன்றாம் இடத்தை பிடித்த – மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக்கழகம்.!!!

(பாறுக் ஷிஹான்)

அப்துல் அஸீஸ் சன்ஸ் வெற்றிக் கிண்ணம் 2025 சுற்றுத்தொடரில் 3ம் இடத்தை தெரிவு செய்யும் போட்டி வியாழக்கிழமை இரவு (11) மருதமுனை மசூர் மெளலானா மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்றது.

இப் போட்டியில் மருதமுனை ஈஸ்டன் யூத் அணியை எதிர்த்து மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக்கழகம் மோதியிருந்த நிலையில் ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகம் 3-1 என்ற அடிப்படையில் வெற்றிபெற்று இச்சுற்றுத் தொடரின் மூன்றாம் இடத்தை தட்டிக்கொண்டு குறித்த ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசினை தனதாக்கிக் கொண்டது.

மேலும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கத்தோடு இணைந்து அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட நடுவர் சங்கம் ஏற்பாடு செய்து நடாத்தும்
அப்துல் அஸீஸ் ரூ சன்ஸ் வெற்றிக் கிண்ணம் 2025 சுற்றுத்தொடரில் 3ம் இடத்தை தெரிவு செய்யும் போட்டியில் பிரதம அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சிரேஷ்ட சட்டத்தரணி எச்.எம் எம் ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இறுதிப் போட்டி இன்றிரவு வெள்ளிக்கிழமை (12) இரவு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்த்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700261

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time