உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மத்திய கிழக்கு மீண்டும் பதட்டத்தில்.!!!

கடந்த ஜனவரி 19 இல் ஆரம்பமான முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பத்தந்தின் பிராகரம் சுமூகமான கைதிகள் பரிமாற்றமே இருதராப்பாரிடையே இடம் பெற்று வந்தது. இருப்பினும் ஹமாஸ் இஸ்ரேல் யுத்த நிறுத்த உடண்படிக்கைகளை மீறி வருவதால் தாம் கைதிகள் பரிமாற்றத்தை ஒத்திப்போடுவதாக அறிவித்துள்ளது.

ஏனெனில் யுத்த நிறுத்த காலப்பகுதிகளில் வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல்லகளை தொடர்ந்து மேற்கொண்டுவருவதாகவும் இதனால் பல உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் , காசா யுத்தம் ஏற்படுவதற்கு முன்னர் தெற்கு காசாவுக்கு இடம் பெயர்ந்து சென்றவர்கள் மீண்டும் வடக்கு காசாவுக்கு மீள வருவதற்கு இஸ்ரேலிய படைகள் அனுமதி மறுத்து வருவதினாலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம் சர்வதேய மனிதபிமான உதவிகள் காசவுக்கு உள்நுழைவதற்கு இஸ்ரேல் அனுமதி மறுத்து வருவதினாலும் வாக்குறுதியளித்த மனிதாபிமான உதவிகளில் சுமார் பத்து சதவீதமான மனிதாபிமான உதவிகளே காசா மக்களுக்கு தற்போது கிடைக்கப்பெறுவதாகவும், சிதைந்து போன கட்டிட ஈடுபாடுகளுக்கு பகரமாக பத்தாயிரம் தற்காலிக கூடாரங்களை காசாவில் அமைப்பதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டபோதும் அதனை மறுத்து வருவதினாலும் தாம் தற்காலிகமாக கைதிகள் பரிமாற்றத்தை இடைநிறுத்துவதாக ஹமாஸ் அறவித்துள்ளது.

இதனிடையே அமெரிக்க சனாதபதி ரெம் கைதிகள் பரிமாற்றத்தை படிப்படியாக மேற்கொள்ளாமல் வரும் ஞாயிற்றுக் கிழமைக்கு முன்னர் ஹாமாஸ் அனைத்து பணயக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என ஹாமாசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதே நேரத்தில் காசா பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி வேறு ஒரு பிரதேசத்தில் குடியேற்றும் ரெம்மின் திட்டப் பேச்சு வார்த்தையில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

காசா மக்களை குடியேற்றுவதற்கு எகிப்தின் வரைபட திட்டங்களுக்கு தாம் காத்திருப்பதாகவும் தேவையான போது சவூதி அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி காசா மக்களை வேறு பிரதேசத்தில் குடியேற்றுவதாகவும் மன்னர் அப்துல்லாஹ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதே நேரத்தில் காசா மக்களுக்கு தூரம் கருதி அமெரிக்காவில் குடியேற வாய்ப்பளிக்கப்போவதில்லை என்றும் தான் தொடர்ந்து காசாவில் தொடர்ந்த்து யுத்ததையே அவதானித்து வருவதால் அங்கு நிரந்தர சமாதானத்தை ஏற்படுவதற்காக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு மன்னர்களுக்கு ஹமாஸ் ஒரு தலையிடியாக இருந்து வருவதால் இஸ்ரேலை ஹமாஸிடம் இருந்து பாதுகாக்க ரெம்மின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சதியா இந்த சமாதான ஒப்பந்தம் என்ற கேள்வி எழும்பியுள்ளது. இதனை மஹதீர் முகம்மதும் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் ஹமாஸ் தமது ராஜதந்திர அனுகுமுறையினால் இந்த சதிகளையும் இலகுவாக கடந்து செல்கின்ற அதேநேரத்தில் இத்தகைய தந்துரோபாய நகர்வுகள் அனைத்தையும் நிராகரித்துள்ள ஹமாஸ் காசாவில் இருந்து காசா மக்களை வெளியேற்றும் எந்த நடவடிக்கைகளுக்கும் இனங்கப்போவதில்லை என்றும் காசா பலஸ்தீன மக்களின் தாயாகப் பூமி என்பதை திடமாக அறிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700784

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time