உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

15 நாட்களாக காணாமல் போனவர்; உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்பு.!!!

(பாறுக் ஷிஹான்)

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம், நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் இரண்டாம் மாடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளளது.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிர்தௌவ்ஸ் பள்ளி வீதி பிரதேசத்தில் இன்று (3) மதியம் அழுகிய நிலையில் உருக்குலைந்த ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 15 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், நீண்ட காலம் நிர்மாணிக்கப்பட்டிருந்த வீடு ஒன்றின் 2 ஆம் மாடியில் குறித்த சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக வீட்டின் உரிமையாளர் முறைப்பாடு ஒன்றினை பொலிஸாருக்கு வழங்கி இருந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 15 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்கள் தேடி வந்ததுடன், சம்மாந்துறை பிரதேசத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 55 வயது மதிக்கத்தக்கவர் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மனநிலை பாதிக்ககப்பட்ட இவர் சகோதரி ஒருவரின் வீட்டியல் தங்கி இருந்த நிலையில் காணாமல் போயிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700288

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time