மோட்டார் சைக்கிள் – திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய; மூவர் கைது.!!!
குருணாகல் – கிரிபாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கிரிபாவ பொலிஸார் தெரிவித்தனர்.
கிரிபாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் ஒருவரிடமிருந்து 305 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் 20 வயதுடைய கொட்டதெனிய பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, சந்தேக நபர்கள் மூவரும் நீர்கொழும்பு மற்றும் குளியாப்பிட்டி உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் தொடர்ச்சியாக மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களையும், குற்றச்செயல்களுக்காக பயன்படுத்திய மற்றுமொரு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் கிரிபாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.