தேசிய மட்ட நீச்சல் போட்டிக்கு; காத்தான்குடி மாணவன் – முகம்மட் சியாப் ஷியாம் தேர்வு.!!!
கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையேயான நீச்சல் போட்டி ஜூலை 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர்.
மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முகமது சியாஃப், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 200 மீட்டர் Individual Medley இல் முதலிடத்தையும், Butterfly stroke இல் 3வது இடத்தையும் பெற்றார். முன்னதாக Individual medeley இல் 4.34 வினாடிகளில் கிழக்கு மாகாண சாதனையை சியாஃப் முறியடித்து, அதை 4.19 வினாடிகளில் முடித்தார்.
2025 செப்டம்பரில் நடைபெறும் தேசிய அளவில் சாம்பியன் அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று காத்தான்குடி society வாழ்த்துகிறது. காத்தான்குடி நீச்சல் வீரரை தேசிய அளவில் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதில் காத்தான்குடி மண்ணும் மகிழ்ச்சியடைகிறது.