உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

இயற்கை அனர்த்தங்கள்: மனித வாழ்வில் பதியப்படும் காயங்கள்.!!!

இடர் அல்லது இயற்கை அனர்த்தம் என்பவை மனித கட்டுப்பாட்டை மீறி நிகழும் பேரழிவுகள். வெள்ளம், மண்சரிவு, புயல், சுனாமி, சூறாவளி ஆகியவை எப்போதும் சமூகத்தைக் குலைக்கும் அகன்ற விபத்துகளாக உள்ளன. இலங்கை போன்ற தீவு நாட்டில் இவ்வகை பேரழிவுகளின் தாக்கம் மிக வேகமாகவும் ஆழமாகவும் பரவுவது குறிப்பிடத்தக்கது.

இவ்வருடம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகள், பலத்த காற்று காரணமாக 25 மாவட்டங்களும் முற்றுமுழுதாக பாதிப்படைந்தன. இதன்போது 273,606 குடும்பங்களைச் சேர்ந்த, 998,918 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 212 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. 212 பேர் காணாமல் போயுள்ளனர். 1,275 பாதுகாப்பு மையங்களில் 51,228 குடும்பங்களைச் சேர்ந்த 180,499 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 30.11.2025 – 16.00 மணி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இது ஒரே ஒரு புள்ளிவிவரம் அல்ல; எண்ணிக்கைகளின் பின்புறம் நின்றிருப்பது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரச் சிதைவு, மனிதரின் துயரங்கள், குழந்தைகளின் கல்வி இடர்ப்பு மற்றும் சமூக வாழ்வின் தளர்வாகும்.

இதனால் வாழ்வாதாரத்தை முற்றாக மாற்றிய வெள்ளக்காயங்களாக விவசாயப் பயிர்கள் அழிந்ததால் வருமானம் குறைவடைந்தது. தொழிற்சாலைகள், சிறு தொழில்கள் செயலிழந்தது. பாடசாலைகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வியில் பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவமனைகள், மருந்தகம் சேதமடைந்து சிகிச்சை தடை.யானது. சாலைகள், பாலங்கள் உடைந்து போக்குவரத்து மந்தமடைந்தது. இவ்வளவு துயரத்தில் கூட மக்கள் தங்களையே தாங்கிக் கொள்ளவேண்டிய துயரப்பாதையில் நடந்தனர்.

அவசரநிலை உருவான சில மணி நேரங்களிலே சமூக அமைப்புகள் நிழல்போல் துயரத்தில் நின்ற மக்களின் பக்கம் திரும்பின. உணவு மற்றும் குடிநீர் விநியோகம், மருத்துவ உதவி, தற்காலிக முகாம்கள் அமைத்தல், ஆடைகள், குழந்தைகளுக்கான பொருட்கள் வழங்குதல், முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அரசின் பணிகளோடு இணைந்து தொண்டு நிறுவனங்கள், மத அமைப்புகள், இளைஞர் குழுக்கள், தனிநபர்களின் தன்னார்வ உதவிகள் மக்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்தன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) மற்றும் முப்படைப் படையினர் இணைந்து 3,500–க்கும் மேற்பட்ட மீட்பு குழுக்கள் மூலம் செயல்பட்டனர். நீரில் சிக்கியவர்களை மீட்குதல் முதல் மருத்துவ ஊர்திகள், உணவு வாகனங்கள், பாதுகாப்பு மைய மேலாண்மை வரை ஒவ்வொரு செயலிலும் அவர்கள் அர்ப்பணிப்பு மிளிர்ந்தது.

இடர் நேரத்தில் மக்கள் ஒன்றிணைந்தால் அனர்த்தத்தின் தாக்கம் பாதியாகக் குறையும். ஒருவருக்கொருவர் உதவியாகவும், தேவைகளை பகிரக்கூடியவர்களாகவும், பாதுகாப்பு மைய ஒழுங்குகளை பேணக்கூடியவர்களாகவும், பிள்ளைகள், முதியோர் பாதுகாப்பிற்காகவும், சமூக உறவை பலப்படுத்தவும் பக்கபலமாக இருந்து செயலபட்டனர். அனர்த்தம் அழிவுகளை கொண்டு வந்தாலும், சமூக ஒருமைப்பாட்டை மீண்டும் உயிர்ப்பிக்கிறது என்பதே உண்மை.

இலங்கை எதிர்கொண்ட 2025 அனர்த்தம் பெரும் துயரங்களைக் கொடுத்தாலும், அதைவிட பெரிய பாடத்தை மக்களுக்கு கற்றுத் தந்தது: “ஒற்றுமையும் கரிசனையும் இருந்தால் எந்த அனர்த்தத்தையும் வெல்ல முடியும்.”

சமூக அமைப்புகளும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால், சமூக நலம் பாதுகாக்கப்படும், வாழ்வாதாரம் மீளும், கல்வி நிலை மீட்கப்படும், எதிர்கால அனர்த்தங்களுக்கான தயாரிப்பும் வலுப்படும். அழிவுகளிலிருந்தும் எழுந்த மனித நேயம், இத்தருணத்திற்கான மிகப் பெரிய வெற்றி எனலாம்.

-எம்.ரி.எம்-

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700073

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time