உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

கடற்படையின் அதிரடி நடவடிக்கை: ஒரே ஆண்டில் 4,000 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 360 பேர் கைது.!!!

இவ்வருடத்தின் ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேற்று (24) வரை கடல் மார்க்கமாக இடம்பெற்ற போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக, கடற்படையினரால் 99 படகுகள் மற்றும் பலநாள் மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 360 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இதே காலப்பகுதியில் கடற்படையினர் மொத்தமாக 4,000 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயினை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில், 2,982 கிலோகிராம் 600 கிராம் ஐஸ், 1,050 கிலோகிராம் 100 கிராம் ஹெரோயின் ஆகியவை அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், 33 கிலோகிராம் ஹஷிஷ், 1,683,722 போதைப்பொருள் மாத்திரைகள், 5,900 கிலோகிராம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கஞ்சா ஆகியனவும் இந்நடவடிக்கைகளின் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடல் எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தி, போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700030

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time