நிறுவனத்தின் ஏற்றுமதியை மேம்படுத்தி சர்வதேச மட்டத்தில் இலங்கையின் கைத்தொழில் நிபுணத்துவ பிரசன்னத்தை வலிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Lion Brewery(சிலோன்) பிஎல்சி, ஏற்றுமதி சந்தைகளை இலக்காகக் கொண்ட கைத்தொழில் மற்றும் விசேடத்துவ (Craft & Specialty) வடிப்புக்கான இலங்கையின் முதலாவது புத்தாக்க நிலையத்தை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.
முதலீட்டு சபையின் அனுமதியில் இயங்கும் திட்டமாக இது அமைந்திருப்பதுடன், கைத்தொழில் மற்றும் விசேடத்துவ வடிப்பு தொடர்பான ஆய்வு மற்றும் அபிவிருத்தி பணிகளை மேம்படுத்துவதில் இந்த நிலையம் தன்னை அர்ப்பணித்திருக்கும்.
Lion Breweryயின் புத்தாக்கமான வடிப்பு தொடர்பான தொடர்ச்சியான பயணத்தில் இந்தத் திட்டம் புதிய மைல்கல்லாக அமைந்திருப்பதுடன், சர்வதேச மட்டத்தில் இலங்கையின் வடிப்பு தொடர்பான பிரசன்னத்தை மேலும் மேம்படுத்துவதாக அமைந்திருக்கும்.
அடுத்த ஐந்தாண்டுகள் காலப்பகுதியில் கைத்தொழில் மற்றும் விசேடத்துவ வடிப்புகளுக்கான சர்வதேச கேள்வி அதிகரிக்கும் என தொழிற்துறைசார் ஆய்வுகளின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.
நுகர்வோர் நிலைபேறான வகையிலும், நேர்த்தியான முறையிலும் உயர் தரம் வாய்ந்த தெரிவு புத்தாக்கங்களில் கவனம் செலுத்துவது இதில் தாக்கம் செலுத்தும்.
மேலும், சுற்றுலாத் துறையினூடாகவும் இந்தக் கேள்வி அதிகம் நிலவுகின்றமையை அவதானிக்க முடியும்.
சுற்றுலாப் பயணிகள், தமது சுற்றுலாப் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, விசேடத்துவமான உணவுகள் மற்றும் பான வகைகளில் அதிகளவு நாட்டம் கொண்டிருப்பர்.
இலங்கையில் நிறுவப்படும் இந்த விடயத்துடன் தொடர்புடைய முதலாவது புத்தாக்க நிலையமாக Lion Brewery புத்தாக்க நிலையம் அமைந்துள்ளது.
ஐரோப்பாவின் சிறந்த தர வடிப்பு சாதனங்களைக் கொண்டிருப்பதுடன், உள்நாட்டிலிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களைக் கொண்டு, பரந்தளவு வடிப்பு முறைமைகளை பின்பற்றி, பெறுமதி சேர் தயாரிப்புகளை தயாரிக்கும் வகையில் இந்த அலகு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டினூடாக, நிறுவனத்துக்கு கைத்தொழில் மற்றும் விசேடத்துவ வடிப்பில் நிபுணத்துவத்தை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும்.
அதனூடாக உள்நாட்டு சுற்றுலாத்துறைக்கு ஆதரவளிப்பதுடன், ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளல், அந்நியச் செலாவணி வருமானங்களை அதிகரித்து, இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒட்டுமொத்த பங்களிப்பை வழங்கக்கூடியதாக இருக்கும்.
Lion Brewery (சிலோன்) பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ் மீவக்கல இந்தத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் புத்தாக்கத்திறன் மற்றும் வடிப்பு சிறப்பை உலகுக்கு கொண்டு செல்வதில் லயன் ப்ருவரியைச் சேர்ந்த நாம் பெருமை கொள்கின்றோம்.
தேசிய பொருளாதாரத்துக்கு பிரதான பங்களிப்பாளராக எமது பணியை மேற்கொள்வதில் எம்மை ஆழமாக அர்ப்பணித்துள்ளோம்.
இந்த புத்தாக்க நிலையத்தினூடாக, எமது எதிர்காலத்தை நோக்காகக் கொண்ட வளர்ச்சித் திட்டங்களில் பிரதான மைல்கல்லை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கான எமது பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதாக இந்த கைத்தொழில் மற்றும் விசேடத்துவ வடிப்புக்கான சர்வதேச கேள்வி அமைந்திருப்பதுடன், எம்மால் அதனை நிவர்த்தி செய்யக்கூடியதாகவும் இருக்கும். என்றார்.
கடந்த ஆறு வருட காலப்பகுதியில் மாத்திரம் Lion Brewery, ரூ. 304.9 பில்லியனை வரிப் பங்களிப்பாக செலுத்தியுள்ளது.
பொருளாதார பங்களிப்புகள் மற்றும் தரம், நிலைபேறாண்மை போன்றவற்றுக்கான தனது அர்ப்பணிப்பினூடாக பொருளாதார பங்களிப்புகளுக்கு ஆதரவளித்த வண்ணமுள்ளது.
இந்த புதிய புத்தாக்க நிலையத்தினூடாக, இந்த அர்ப்பணிப்பு மேலும் வலிமைப்படுத்தப்படும் என்பதுடன், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் ஆற்றலை விரிவாக்கி, நூற்றாண்டுக்கு மேலாக வடிப்பு சிறப்பு பாரம்பரியத்தை பேணும்.