பெப்ரவரி மாத சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை – லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு.!!!
பெப்ரவரி மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சந்தை விலை மாற்றங்கள் மற்றும் உள்நாட்டு செலவீனங்கள் தொடர்பாக பரிசீலனை மேற்கொள்ளப்பட்ட போதிலும், தற்போதைய நடைமுறையில் உள்ள எரிவாயு விலைகள் அதேபடி தொடரும் என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் படி, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலைகளில் எந்த மாற்றமும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
நுகர்வோருக்கு நிலையான விலையை வழங்குவதே இந்த தீர்மானத்தின் முக்கிய நோக்கம் எனவும், எதிர்கால விலை மாற்றங்கள் தேவையான நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.