உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 12, 2025

Hot News

சுமார் 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள; ஹெரோயினுடன் ஒருவர் கைது.!!!

டுபாயில் தலைமறைவாக இருந்து, ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி களுத்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஹெரோயினை விநியோகித்து வந்த பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ஒருவர், சுமார் 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். ஆரம்ப விசாரணைகளின் படி, களுத்துறை, மத்துகம, பாணந்துறை, பயாகல, பேருவளை உள்ளிட்ட பல பகுதிகளில், ஈஸி கேஷ் முறையை பயன்படுத்தி அவர் ஹெரோயினை விநியோகித்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த 41 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரின் முச்சக்கர வண்டி மற்றும் வர்த்தக நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி ஆகியனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் இன்று (10) களுத்துறை நீதவானிடம் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related News

Total Websites Views

Total Views: 310920

Search

விளம்பரங்கள்