உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 13, 2025

Hot News

60 வயதிலும் 03 பதக்கங்கள் வென்று சாதனை படைத்த; ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆலோசகர் இப்ராஹிம்.!!! 

இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், கனடா, மாலைதீவு மற்றும் இன்னும் பல நாடுகள் கலந்து சிறப்பிக்கும் 11வது வருடாந்த மாஸ்டர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்-2025. போட்டிகள் 24,25ம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டிகளில் 60-64 வயதுப்பிரிவு ஆண்களுக்கான போட்டியில் நிந்தவூர் மண் சார்பாக கலந்து கொண்டு 1 தங்கம் மற்றும் 2 வெண்கலப்பதக்கங்களை வென்று இப்ராஹிம் ஆசிரியர் 60 வயதிலும் சாதனை படைத்துள்ளார்.

கல்முனை கல்வி வலய முன்னாள் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆலோசகர் அல்ஹாஜ் இப்றாஹீம் ஆசிரியர் (கபூர் ஆசிரியர்) 300MH தடைதாண்டல் ஓட்டத்தில் முதலாமிடம் தங்கப்பதக்கம், 100M ஓட்டம் மற்றும் 110MH தடைதாண்டல் ஓட்ட நிகழ்ச்சிகளில் மூன்றாமிடங்களைப் பெற்று இரு வெண்கல பதக்கங்களையும் வென்று நிந்தவூருக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

Total Websites Views

Total Views: 313091

Search

விளம்பரங்கள்