6 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான்; 1–0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை.!!!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றியைப் பெற்றுள்ளது.
நேற்றைய (11) போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட பாகிஸ்தான் அணியை அழைத்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 299 ஓட்டங்களை குவித்தது.
அந்த அணிக்காக சல்மான் ஆகா அதிரடியாக ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களை பெற்றார். ஹுசைன் தலாத் 62 ஓட்டங்களையும், மொஹமட் நவாஸ் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க சிறப்பாக விளையாடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 300 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 293 ஓட்டங்கள் மட்டுமே பெற்று தோல்வியைச் சந்தித்தது.
இலங்கை அணிக்காக வனிந்து ஹசரங்க 59 ஓட்டங்களுடன் அதிகபட்ச பங்களிப்பு செய்தார். பாகிஸ்தான் அணிக்காக ஹாரிஸ் ரவூஃப் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில், பாகிஸ்தான் அணி 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.









