உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!
இஸ்ரேலுடனான யுத்தம் ஆரம்பித்த பின்னர் பலஸ்தீனிய போராளி அமைப்பான ஹமாஸ் புதிதாக 15000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்துக்கொண்டுள்ளது என அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் மூலம் ஈரான் ஆதரவு அமைப்பு இஸ்ரேலிற்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக விளங்கலாமென அமெரிக்க புலனாய்வு பிரிவுகள் தெரிவிக்கின்றன.
இதேயளவு 15000 ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலுடனான மோதலின் போது கொல்லப்பட்டனர் என அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜோபைடன் நிர்வாகத்தின் இறுதி நாட்களில் கிடைத்த தகவல்கள் உட்பட பல தகவல்கள் குறித்து அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் காங்கிரஸிற்கு பல தகவல்களை வழங்கியுள்ளன.
ஹமாஸ் புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதில் வெற்றிபெற்றுள்ளது. புதிதாக இணைக்கப்பட்டவர்களில் பலர் இளையவர்களென தெரிவித்துள்ள அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் புதியவர்களிற்கு இன்னமும் பயிற்சிகள் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் அலுவலகம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.
காசாவில் தான் இழந்த அதேயளவு உறுப்பினர்களை ஹமாஸ் மீண்டும் சேர்த்துக்கொண்டுள்ளதென அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்திருந்தார்.
இது நீடித்த கிளர்ச்சி, நிரந்தர போரை உருவாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையை பூர்த்தி செய்த பின்னர் படைகளை மீளபெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஹமாஸ் மீள் எழுச்சி பெறுகின்றது. பூர்த்தி செய்வதற்கு வேறு எந்த வெற்றிடமும் இல்லாததே இதற்கு காரணமென அன்டனி பிளிங்கென் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700765

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time