உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

உலக மேசைப்பந்தாட்ட தரவரிசையில் இலங்கைக்கு பெருமை – 11 வயது டாவி சமரவீர 3ஆம் இடத்தில்.!!!

இலங்கையின் வளர்ந்து வரும் இளம் மேசைப்பந்தாட்ட நட்சத்திரமான டாவி சமரவீர (Taavi Samaraweera), உலக மேசைப்பந்தாட்ட வரலாற்றில் தனது பெயரை பொற்குறிகளில் பதிவு செய்துள்ளார்.

11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவுக்கான (Under-11 Boys) உலக மேசைப்பந்தாட்ட தரவரிசையில் 3ஆம் இடத்தை பிடித்து, எந்தவொரு வயதுப் பிரிவிலும் இலங்கை வீரர் ஒருவரால் இதுவரை எட்டப்படாத உயர்ந்தபட்ச தரவரிசை சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனம் (ITTF) வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில், டாவி சமரவீர 52 இடங்கள் முன்னேறி, 200 தரவரிசைப் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

தற்போது உகாண்டாவின் ஜோசப் செபாடிண்டிரா (Joseph Sebatindira) மற்றும் கட்டாரின் ரபியா அல்-குவாரி (Rabeah Al-Kuwari) ஆகியோர் மட்டுமே டாவி சமரவீரவுக்கு முன்னால் உள்ளனர்.

இளமைக்காலத்திலேயே உலக தரவரிசையில் முதல்மூன்றில் இடம்பிடித்துள்ள டாவி சமரவீரவின் இந்தச் சாதனை, இலங்கை விளையாட்டு உலகிற்கு — குறிப்பாக மேசைப்பந்தாட்ட துறைக்கு — பெரும் பெருமையையும் ஊக்கத்தையும் தேடித்தந்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700127

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time