உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

ஏறாவூர் நீதிமன்ற சிறைக்கூட மலசல கூடத்தில்; கைதி தூக்கிட்டு தற்கொலை.!!!

ஏறாவூர் நீதிமன்ற சிறைக்கூட மலசல கூடத்தினுள், ஒரு சிறைக்கைதி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் இன்று (26) மதியம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

ஏறாவூர் மிச்நகர் பகுதியைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் வைத்திருத்தமை மற்றும் களவு தொடர்பான ஏழு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான நிலையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதையடுத்து, மலசல கூடத்திற்குச் சென்ற அவர், அணிந்திருந்த சாரனின் பகுதியை கிழித்து ஜன்னலில் கட்டி, கழுத்தில் சுற்றி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

மற்றொருவர் மலசல கூடத்திற்குள் சென்றபோது, சடலம் தொங்கிகொண்டிருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து சான்றுகளை சேகரித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பித்தார்.

மேலும், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தின் பதில் நீதிபதி வீ. தியாகேஸ்வரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700231

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time