புனித அல் – குர்ஆனை எரித்து உலகளாவிய முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி சமூக வலைத் தளங்களில் பல்வேறு விதமாக முஸ்லிம்களையும், குர்ஆனையும், இறைவனையும் பரிகசித்துவந்த சல்வான் மொமிகா கொலை செய்யப்பட்டதை ஆதரித்து உலகளாவிய ஊடகங்கள் சமூக ஊடகங்களில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
குர்ஆனை எரித்ததாககுற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக ஸ்வீடன்ஸ்டொக்ஹோம் நீதிமன்றம் ஒன்றில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராவதற்கு தயாராகவிருந்த போது இவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சுவீடன் ஹோவ்ஸ்ஜோபகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்ததுப்பாக்கிச் சூட்டுசம்பவத்தில் காயம் அடைந்தஇவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபலனளிக்காத நிலையில் மரணம் அடைந்தார்.
இஸ்லாத்திற்கு எதிரான காணொளிகளை வெளியிடுவதையே தனது முழு நேர செயற்பாடாகக் கொண்டிருந்த இவர் இவ்வாறான ஒருகாணொளியை ஒளிபரப்புசெய்து கொண்டிருந்த நிலையிலேயே சுடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சுவீடனில் வசிக்கும் ஈராக்கியரான இவர் ஆகஸ்ட் மாதம் 2023ஆம் ஆண்டு பலருடன் சேர்ந்துஅல் குர்ஆனை எரித்ததோடு, 54 தடவைகள் இஸ்லாத்திற்கு எதிரானசெயற்பாடுகளை நடத்தி அவற்றை காணொளியாக வெளியிட்டுள்ளார்
அல்குர்ஆனை எரித்த சம்பவத்தில்பிரதிவாதியான இவர் கொலை செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவர் குர்ஆனை எரித்த சம்பவத்தை அடுத்து உலகளாவிய எதிர்ப்பு கிளம்பிய அதே வேளைஇவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பல நாடுகள்சுவீடனை வேண்டிய போதிலும்அந்நாட்டின் கருத்துச் சுதந்திரம்இவரைக் காப்பாற்றி வந்தது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்தஈராக் அப்போது ஸ்வீடன் அரசுக்கு எதிரான கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன் ஈராக்குக்கான சுவீடன் நாட்டுதூதுவரையும் திருப்பி அனுப்பியது.
சுவீடனில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதைஅறிந்த அவ்வரசாங்கம் அவரை நோர்வே நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்திருந்தபோதிலும் அங்கும் அவருக்கு அச்சுறுத்தல் நிலவியதால் நோர்வேயும் மீண்டும் அவரை சுவீடனுக்கு திருப்பி அனுப்பியது.
ஈராக் நாட்டவரான இவர் சுவீடனுக்கு புகலிடம் தேடி வந்துமத, இன நிந்தனைகளில் ஈடுபட்டு வந்ததுடன் நிராயுத பாணிகளான அப்பாவி பலஸ்தீனர்களைகுண்டு வீசி இனப்படுகொலை செய்யும் சியோனிசத்தை பாராட்டி இஸ்ரேல் கொடியை ஏந்தி பிரச்சாரம் செய்து வந்ததால்உலக முஸ்லிம்களின் வெறுப்பை சம்பாதித்து வந்த நபரானார்.