4601 சட்டவிரோத சிகரெட்டுக்களை; விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் – இரு சந்தேக நபர்கள் கைது.!!!
நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத சிகரெட்டுக்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர்.
அத்துடன் இவர்களிடம் இருந்து 07 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான 4601 சட்டவிரோதமாக சிக்ரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ டபிள்யூ எஸ் நிசாந்த வெதகே தெரிவித்தார்
இது தொடர்பாக நிந்தவூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ டபிள்யூ எஸ் நிசாந்த வெதகே தலைமையில் பொலிஸ் சாஜன் PS 36937 பண்டார, பொலிஸ் கொஸ்தாபல் PC 29752 இஸுறு ஆகியோர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றி வாளைப்பின் போதே சந்தேக நபர்களுடன் பெருந்தொகையான இந்த சட்ட விரோத சிக்ரோட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிசார் முன்னெடுத்துள்ளதுடன், இந்த சட்டவிரோத சிகரெட்களுடன் சந்தேக நபர்கள் இருவரையும் நாளை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்