உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

July 19, 2025

Hot News

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட; மோட்டார் சைக்கிளுடன் –  19 வயது இளைஞன் கைது.!!!

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் இளைஞன் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (18) இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் புத்தளம் – நுரைச்சோலை நாவற்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபரான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நாவற்காடு பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஆவார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related News

Total Websites Views

Total Views: 263969

Search

விளம்பரங்கள்