உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 19, 2025

Hot News

சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட; 1180 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் 20,000 வெளிநாட்டு சிகரெட்களுடன் – இருவர் கைது.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினர் கற்பிட்டி சேராக்குளி கலப்பு பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 1180 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் 20,000 வெளிநாட்டு சிகரெட்களுடன் இருவரையும் இரண்டு டிங்கி படகுகளையும் நேற்று (12) கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடல் வழி ஊடாக இடம்பெறுகின்ற கடத்தல் உட்பட, சட்ட விரோத நடவடிக்கைளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரைகளை உள்ளடக்கி கடற்படையினர் வழக்கமாக ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனம் கற்பிட்டி சேராக்குளி களப்பு பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே மேற்படி சட்ட விரோத பொருட்கள் சந்தேக நபர்களுடன் டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 மற்றும் 45 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேக நபர்கள் புத்தளம் மதுவரி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற் படையினர் தெரிவித்தனர்.

Related News

Total Websites Views

Total Views: 322775

Search

விளம்பரங்கள்