சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட; 979 கிலோ உலர் இஞ்சியுடன் – மூவர் கடற்படையினரால் கைது.!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொ ண்டு வரப்பட்ட 979 கிலோ கிராம் உலர் இஞ்சியையும் அதற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று டிங்கி படகுகளையும் கைப்பற்றியதுடன் மூன்று சந்தேக நபர்களையும் கற்பிட்டி எத்தாளை களப்பு பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த நேற்று (1) கற்பிட்டி எத்தாளை களப்பு பகுதியில் மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 979 கிலோ கிராம உலர்ந்த இஞ்சி அதற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று
டிங்கி படகுகளுடன் அதில் இருந்த மூன்று சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
கடல் வழிகள் ஊடாக கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவை சுற்றியும் உள்ள கடல் மற்றும் கடற்கரைகளை உள்ளடக்கி கடற்படையினரால் வழக்கமாக தேடுதல் மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி வடமேற்கு கடற்படைக்கு சொந்தமான இலங்கை விஜய கடற்படை கப்பல் கற்பிட்டி ஏத்தாளை களப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக காணப்பட்ட மூன்று டிங்கி படகுகளை சோதனையிட்ட போது அதில் சட்ட விரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட உலர்ந்த இஞ்சி பொதிகள் 33 காணப்பட்டதாகவும் அவைகளின் மொத்த நிறை 979 கிலோ கிராம் என்பதுடன் படகுகளில் காணப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் ஆகியோருடன் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 க்கும் 41 வயதிற்குட்பட்ட கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்படாடுள்ளதாகவும் சந்தேக நபர்கள் மூவருடன் கைப்பற்றப்பட்ட உலர்ந்த இஞ்சி மற்றும் மூன்று டிங்கி படகுகள் என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.