உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்.!!!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை என்றும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேக பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (05) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சரான நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்திற்குப் பல தகவல்கள் கிடைத்துள்ளன என்றும், எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிந்த தகவல்களை விட மேலதிக தகவல்கள் அரசாங்கத்திடம் உள்ளன என்றும் தெரிவித்தார்.

மேலும், நிலைமையைத் தீர்க்கவும், உயிர்ச்சேதங்களை குறைக்கவும், பிராந்திய அமைதியை பாதுகாக்கவும் தேவையான தலையீடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700964

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time