அறுகம்குடாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணிடம் பாலியல் சேட்டை – சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை.!!!
வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி அறுகம்குடா சுற்றுலா பகுதிக்கு வந்திருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவர் தனது அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொல்லை செய்த சம்பவம் சமூக ஊடகங்களில் காணொளியாக பரவியது. இதன் பின்னர் நாட்டிலேயே பெரும் கண்டனங்கள் எழுந்தன.
சம்பவத்துக்கு முகங்கொடுத்த வெளிநாட்டு பெண் ஒருவர் எழுத்து மூலம் பொலிஸில் அதிகாரப்பூர்வ முறைப்பாடு சமர்ப்பித்துள்ளார். இலங்கைக்கு சுற்றுலாவாக வந்திருந்த பெண்ணே இந்த அசிங்கமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞன் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.