உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

3700 மெட்ரிக் டன் எரிவாயு ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது.!!!

நாடு முழுவதும் நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், 3700 மெட்ரிக் டன் திரவ எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (22) நாட்டை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இக்கப்பலில் கொண்டு வரப்பட்டுள்ள எரிவாயுவை பயன்படுத்தி சுமார் 300,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3900 மெட்ரிக் டன் மற்றும் 3700 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினமும் (22) நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தேவைக்கேற்ப விரைவான விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700920

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time