வெளிநாட்டு 18+ தளங்களின் கவர்ச்சியில் சிக்கிய இலங்கையர்கள் – சட்ட நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை.!!!
வெளிநாடுகளில் இயங்கும் 18+ தளங்கள் மற்றும் மொபைல் செயலிகள், அதிகளவில் நிதிச் சலுகைகளை வழங்குவதால், இலங்கையர்கள் பலர் ஒன்லைனில் தவறான காணொளிகளை தயாரிப்பதற்கும் பதிவேற்றுவதற்கும் ஈர்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இளம் தம்பதிகள், தங்கள் அடையாளங்கள் மறைக்கப்படும் என்ற நம்பிக்கையிலும், வீட்டிலிருந்தே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற எண்ணத்திலும் இதில் ஈடுபடுவதாகும்.
எனினும், தவறான காணொளிகளை தயாரித்தல், விளம்பரப்படுத்தல் அல்லது விநியோகித்தல் ஆகியவை இலங்கையில் சட்டவிரோதமான குற்றங்கள் எனவும், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
மேலும், சில தளங்கள் வெளிநாட்டிலிருந்து இயங்கினாலும், அவற்றில் இலங்கையிலிருந்து பங்கேற்பது குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், ஒரு திருமணமான தம்பதியினர், தங்களது சொந்த தவறான காணொளிகளை இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட பணம் செலுத்தும் வயதுவந்தோர் வலைத்தளத்தில் பதிவேற்றியதற்காக, நுகேகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸார், இத்தகைய வெளிநாட்டு இணைய தளங்கள் மற்றும் செயலிகள் மூலம் வழங்கப்படும் பொய்யான வருமான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்றும், இணையத்தை பெறுமானமான நோக்கங்களுக்கே பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.