எரிபொருள் விலை குறைப்பு; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு.!!!
கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒரு போதும் ஏற்படாதவாறு செயற்பட்டுக் கொண்டிருப்பதோடு, எரிபொருள் விலை, மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டு நாடு ஸ்திரத்தன்மையை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
மொரட்டுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவினுடைய பொருளாதார நிலையைக் கருத்திற் கொண்டு பரஸ்பர வரியை விதித்திருந்தார்.
எனினும் ட்ரம்பினுடைய அந்த தீர்மானத்திற்கு நமது நாட்டிலுள்ள எதிர்க்கட்சியினரே அதிகம் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் தற்போது அனைத்தும் சீராகி விட்டது.
எமது நாட்டிலுள்ள குழுவினர் ஐக்கிய அமெரிக்காவுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர். அந்த பிரச்சினையை இலகுவாக தீர்த்துக் கொள்ள நாம் முயற்சிக்கின்றோம்.
மேலும், இலங்கை வரலாற்றில் அதிகளவு திறைசேரி வருமானத்தை பெற்ற ஆண்டாக மாற்றுவதே எமது நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.