உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

July 6, 2025

Hot News

இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்; பங்களாதேஷ் அணி 16 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.!!!

இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 249 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை சார்பாக ஜனித் லியனகே அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் அவரால் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

இலங்கை அணி ஒரு கட்டத்தில் 25.2 ஓவர்களில் 126 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த போதிலும் ஜனித் லியனகேவின் அபார அரைச்சதத்துடன் சவாலான நிலைக்கு உயர்ந்தது.

வெற்றிக்கு 21 ஓட்டங்களே தேவையாக இருந்த போது ஜனித் லியனகே 78 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கையின் எதிர்ப்பார்ப்பு முடிவுக்குவ வந்தது.

இலங்கை அணியால் 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 232 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 45.5 ஓவர்களில் 248 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியின் முடிவுக்கு அமைவாக தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றன.

இதற்கமைய எதிர்வரும் 8 ஆம் திகதி கண்டி பல்லேகெலே மைதானத்தில் நடைபெறவுள்ள 3ஆவது போட்டி சர்வதேச ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் ஒன்றாக மாறியுள்ளது.

Related News

Total Websites Views

Total Views: 241988

Search

விளம்பரங்கள்