மட்டக்களப்பில் இரவு நேர உணவகங்கள் திடீர் பரிசோதனை – உணவகம் 14 நாட்களுக்கு மூடப்பட்டது.!!!
மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் கடந்த (13) இரவு நேரத்தில் பஸ்தரிப்பு உணவகங்கள் குறித்த விசேட சுகாதார திடீர் பரிசோதனை நடவடிக்கை நாவலடி மற்றும் ஓட்டமாவடி பகுதிகளில் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் முரளீஸ்வரன் வழிகாட்டலில், சுகாதார வைத்திய அதிகாரிகள், மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனையை மேற்கொண்டனர்.
இந்த பரிசோதனையில், மனித நலத்திற்கு தீங்கான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்த ஒரு உணவகத்திற்கு எதிராக உடனடியாக வழக்கு தொடரப்பட்டது.
மேலும், வாழைச்சேனை நீதிமன்றம் ஊடாக அந்த உணவகத்தை அன்றைய தினம் முதல் 14 நாட்கள் மூட கட்டளை வழங்கியதோடு, உரிய உணவக உரிமையாளருக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டது.
பரிசோதனை செய்யப்பட்ட பிற உணவகங்களுக்கும் எதிர்வரும் நாட்களில் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

