காத்தான்குடியின் நிலையான வளர்ச்சிக்கு; அடிப்படையிலான திட்டங்கள்.!!!
(மர்சூக் காசிம்)
அல்ஹம்துலில்லாஹ், எனது சிற்றறிவையும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு, காத்தான்குடி நகரத்தின் சுற்றுச்சூழல், பொருளாதாரம், இளைய தலைமுறையின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை மையப்படுத்தி மூன்று முக்கியமான திட்டங்களை எழுதியுள்ளேன்.
இத்திட்டங்கள் அனைத்தும் research அடிப்படையில் வடிவமைக்கப்பட்டவை.
இந்த projects களை செயற்படுத்த நினைக்கும் அதிகார தரப்புகளிடம் (அவர்கள் விரும்பினால்) இதன் முழுமையான விரிவான தகவல்களை (complete detailed projects proposal) என்னால் வழங்க முடியும்.
🕌 Project A (திட்டம் A) – காத்தான்குடி Gate – Cultural Landmarks (Kattankudy Gate)
1. பின்னணி மற்றும் நியாயம்
காத்தான்குடி என்பது தனித்துவமான இஸ்லாமிய கலாச்சார பாரம்பரியத்தை கொண்ட நகரம். ஆய்வுகளின்படி, cultural landmarks நகரத்தின் பிரபலத்தையும், சுற்றுலாவையும் மேம்படுத்துகின்றன.
2. நோக்கங்கள்
காத்தான்குடியின் பண்பாட்டை பிரதிபலிக்கும் முக்கிய நுழைவாயில் உருவாக்கம்.
நகரத்தின் tourist identityயை உருவாக்குதல்.
இஸ்லாமிய கட்டிடக் கலை அழகை வெளிப்படுத்துதல்.
3. செயல்பாடுகள்
Uzbekistan style அடிப்படையில் Kattankudy Gate எனும் நகரத்தின் tourist identityயை வடிவமைத்தல்.
Energy-efficient LED lighting மூலம் இரவில் அழகாக ஒளிரும் வகையில்.
தமிழ், சிங்களும், ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் வரவேற்பு பலகைகள்.
4. எதிர்பார்க்கப்படும் பலன்கள்
காத்தான்குடியின் புதிய பார்வை அடையாளம் (visual identity) உருவாகும்.
சுற்றுலா மேம்பாடு மற்றும் புகைப்பட புள்ளி (photo attraction) ஆகும்.
உள்ளூர் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு.
5. நிலைத்தன்மை மற்றும் தாக்கம்
இந்த நுழைவாயில் Urban Council மற்றும் தனியார் கூட்டாண்மை மூலம் பராமரிக்கப்படும். இது நகரத்தின் பண்பாட்டு சின்னமாகவும், வருங்கால தலைமுறைக்கான நினைவாகவும் அமையும்.
🌊 Project B (திட்டம் B )– காத்தான்குடி படகு இல்லம் (Kattankudy Houseboat )
1. பின்னணி மற்றும் நியாயம்
காத்தான்குடியின் வாவி/ ஆற்றங்கரை (Lagoon) என்பது சுற்றுச்சூழலிலும், சுற்றுலாவிலும் மிகுந்த திறன் கொண்ட இயற்கை வளமாகும். உலகளாவிய ஆய்வுகளின் தரவுகளின்படி, eco-tourism வளர்ச்சியால் சமூக வருமானம் உயரும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மேம்படும். இதனை அடிப்படையாகக் கொண்டு, ஒரு Boat House திட்டம் காத்தான்குடியில் உருவாக்கப்பட வேண்டும், இது கேராளாவின் ஆழப்போழாவை ஒத்ததாக அமையும்.
2. நோக்கங்கள்
காத்தான்குடியில் eco-tourism மற்றும் ஓய்வு நேர சுற்றுலா வளர்த்தல்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தல்.
ஏரி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொறுப்பான சுற்றுலா நடைமுறைகள்.
3. செயல்பாடுகள்
இயற்கைக்கு ஏற்ற மர அடிப்படையிலான boat house கட்டிடம்.
படகு சவாரி, family lagoon tours, safety awareness programs.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்கள்.
சிறிய refreshment stalls & souvenir shops – உள்ளூர் மக்களின் மேலாண்மையில்.
4. எதிர்பார்க்கப்படும் பலன்கள்
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு.
புதிய வருமான வாய்ப்புகள் உருவாக்கம்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அதிகரிப்பு.
5. நிலைத்தன்மை மற்றும் தாக்கம்
சூரிய ஒளி மின்சாரம், கழிவு இல்லா (zero waste) மேலாண்மை போன்ற eco-friendly நடைமுறைகள். நீண்டகாலத்தில் இது சுயநிதி அடிப்படையிலான சுற்றுலா மையமாக மாறும்.
💪 Project C (திட்டம் C) – சுற்றுச்சூழல் நட்பு திறந்த உடற்பயிற்சி மையம் (Eco-Friendly Open Gym)
1. பின்னணி மற்றும் நியாயம்
இன்றைய இளைஞர்களில் உடல் இயக்கம் குறைவதால் பல ஆரோக்கிய பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. உலகளாவிய ஆய்வுகள் காட்டியுள்ளபடி, open-air fitness spaces மக்கள் ஆரோக்கியத்தையும், மனநலத்தையும், சமூக உறவையும் மேம்படுத்துகின்றன.
2. நோக்கங்கள்
அனைத்து வயதினருக்கும் இலவச, திறந்த உடற்பயிற்சி வாய்ப்பு ஏற்படுத்துதல்.
மனநலம் மற்றும் உடல்நலம் மேம்படுத்துதல்.
சுற்றுச்சூழலுடன் இணைந்த உடற்பயிற்சி கலாச்சாரம் உருவாக்குதல்.
3. செயல்பாடுகள்
மின்சாரம் தேவையில்லாத outdoor gym equipment அமைத்தல்.
சூரிய ஒளி விளக்குகள் நிறுவல்.
பசுமை சூழல் மற்றும் நடைபாதைகள் அமைத்தல்.
ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மருத்துவ நிபுணர்களுடன்.
4. எதிர்பார்க்கப்படும் பலன்கள்
ஆரோக்கியமான இளைஞர்கள் உருவாகுதல்.
சமூக உறவு மற்றும் நலன் மேம்பாடு.
மருத்துவச் செலவுகள் குறைவு மற்றும் உடல்நல விழிப்புணர்வு அதிகரிப்பு.
5. நிலைத்தன்மை மற்றும் தாக்கம்
இது zero electricity, குறைந்த பராமரிப்பு, முழுமையாகப் பொதுமக்களுக்கு திறந்த முறைமையில் இயங்கும்.
இது UN SDG 3 (Good Health and Well-being) மற்றும் SDG 11 (Sustainable Cities & Communities) இலக்குகளுடன் இணக்கமானது.
🌍 முடிவு
இந்த மூன்று திட்டங்களும் – Boat House, Cultural Gate, Eco-Friendly Open Gym – காத்தான்குடியின் ஆராய்ச்சி அடிப்படையிலான நிலையான வளர்ச்சி நோக்கை (Sustainable Kattankudy – 2030) நோக்கி நகர்த்தும்.
இவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, ஆரோக்கியமான இளைஞர்கள் மற்றும் சுற்றுலா மேம்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முழுமையான வளர்ச்சி முறைமையை வழங்கும்.
இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், காத்தான்குடி ஒரு முன்னேற்றமான, ஆரோக்கியமான, பசுமையான நகரமாக மாறும்.





