உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

புத்தளம் – அனுராதபுரம் வீதியில் தற்காலிக பாலம் சேதம்: போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது.!!!

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியின் 9ஆம் மைல் கல் பகுதியில் அமைந்துள்ள தற்காலிக பாலம் சேதமடைந்துள்ளதால், அந்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட “டித்வா” சூறாவளி காரணமாக அப்பகுதியில் இருந்த பழைய பாலம் கடுமையாக சேதமடைந்து இடிந்து விழுந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்களின் பயண வசதியை கருத்தில் கொண்டு அங்கு தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அந்த தற்காலிக பாலமும் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான தகவல் புத்தளம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விரைவில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700983

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time